இந்தியா

16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு இனி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்ட லைஸென்ஸ் : மத்திய அரசு தகவல் 

DIN

புது தில்லி: 16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு இனி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்ட லைஸென்ஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் போது மக்களவையில்  எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்ட லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறையின் சார்பாக எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் 16 வயது நிரம்பியவர்களுக்கு 15 சிசி என்ஜின் திறனுக்கு கீழுள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு லைசென்ஸ் வழங்க ஏற்கனவே விதிமுறைகள் உள்ளது. ஆனால் தற்போது அத்தகைய ஸ்கூட்டர்கள் எதுவும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை.

எனவே 16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு இனி 4.0 வாட் திறன் உள்ள கியர் இல்லாத எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது பைக் ஓட்ட லைஸென்ஸ் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.    

இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக முன்னரே அத்துறையின் அமைச்சரான நிதின் கட்கரி கருத்துக்களை தெரிவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT