முகப்பு
இந்தியா

சபரிமலை: கண்காணிப்பு குழுவின் அறிக்கை தாக்கல்

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரங்கள் குறித்து பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு, தனது அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது.

Updated On : 14 பிப்ரவரி 2019, 2:50 am IST
பகிர்:


சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரங்கள் குறித்து பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழு, தனது அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்
தில் புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் திருவிழா மற்றும் பக்தர்கள் கூட்டத்தை நிர்வாகம் செய்வதில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு இருக்கும் தன்னாட்சி அதிகாரத்துக்கு போலீஸார் மதிப்பு கொடுக்க வேண்டும். சபரிமலையில் சட்டம் -ஒழுங்கை பேணுவது, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவை போலீஸாரின் மிகவும் முக்கிய பணியாக இருக்க வேண்டும். நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு முன்பதிவு செய்த பேருந்தில் பக்தர்கள் குழுவாக வருவதை ஊக்குவிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், பக்தர்கள் தனித்தனியாக பிரிந்து செல்வது தவிர்க்கப்படும். இதுதொடர்பான சேவையை தொடங்க கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.