இந்தியா

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி

DIN

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அமைச்சரவை கூட்டத்தில் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

பயங்கரவாதத் தாக்குதலை தடுக்க அனைத்து வகையான நடவடிக்கையையும் வெளியுறவு அமைச்சகம் எடுக்கும். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் பாகிஸ்தானை தனித்துவிட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். 

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு கொடுத்த அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை திரும்ப பெற்றது இந்தியா. இதனால் வர்த்தக ரீதியாக அனைத்து உறவுகளும் தடைபடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT