இந்தியா

புனித யாத்திரையையும் பயங்கரவாத தாக்குதலையும் ஒன்றாக கருதக் கூடாது: நவ்ஜோத் சிங் சித்து

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் வியாழக்கிழமை பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கூறியதாவது:

கர்தர்பூர் மக்களின் மனங்களை இணைக்கக்கூடியது. பக்தியின் காரணமாக மேற்கொள்ளும் புனித யாத்திரையின் போது ஒவ்வொருவரும் தங்களை வேறுமாதிரியாக உணர்வார்கள். கர்தர்பூருக்கும் காஷ்மீரின் புலவாமா தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? எனவே இதுபோன்ற தேவையற்ற பேச்சினை ஒதுக்கித்தள்ளிவிட்டு, பயங்கரவாதத்தின் காரணம் அறிந்து அதை முற்றிலும் அழிப்போம்.

பயங்கரவாதத்துக்காக ஒட்டுமொத்த நாட்டின் மீதும் பழிபோடுவது சரியாகாது. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது. ஒவ்வொரு நாட்டிலும் நன்மையும், தீமையும் கலந்துதான் இருக்கும். அதில் தீமை அழிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், அதற்காக தனிநபரையோ அல்லது ஒரு நாட்டின் மீதோ குற்றம்சாட்டுவது சரியாகாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT