இந்தியா

புல்வாமா தாக்குதல் நடத்தியவர்கள் எங்கு ஓடி ஒளிந்தாலும், தேடி அடிப்போம்: பிரதமர் மோடி

DIN

மஹாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

வீரர்களின் உயிரிழப்பு வீண்போகாது. புல்வாமா தாக்குதலை யாரும் மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது. பயங்கரவாதிகளும், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களும் செய்த பாவச்செயலுக்கான தண்டனையை நிச்சயம் அனுபவிக்க வேண்டும். 

உங்களின் கோபம் எனக்கு புரிகிறது. நான் இந்த நாட்டுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியை அளிக்கிறேன். மக்கள் பொறுமையாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டு என்று விரும்புகிறேன். பயங்கரவாதிகளை எங்கு, எப்போது, எப்படி, எந்த வகையில் தண்டிக்க வேண்டும் என்று ராணுவ வீரர்களுக்கு தெரியும். பயங்கரவாதிகள் எங்கு ஓடி ஒளிந்தாலும், அவர்களை தேடி அடிப்போம். 

பிரிவிணைக்கு பின்னர் ஏற்பட்ட நாட்டினால் தான் சர்வதசே அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. ஏனென்றால், அவர்கள் தான் பயங்கரவாதத்துக்கு அடைக்கலம் அளித்து வருகின்றனர். தற்போது அந்த நாடு உலகளவில் தனிமைப்படுத்தப்பட உள்ளது. அவர்களின் பொருளாதாரம் வீழப்போகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT