இந்தியா

சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி நிதியுதவி

Raghavendran

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி நிதியுதவி வழங்கினார்.

ஒவ்வொரு சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல், உதவி தேவைப்படும்போது எல்லாம் தான் துணை நிற்பதாகவும் உறுதியளித்தார்.

இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில், இந்திய அணிக்காக நாங்கள் விளையாடும் போது, நமது பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் தான் எல்லைப்பகுதிகளில் துணை நிற்கின்றனர். தற்போது அவர்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பாக நாம் அனைவரும் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

முன்னதாக, வீரர்களின் குழைந்தைகளுடைய முழுக் கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உறுதியளித்தார். அதுபோன்று துவக்க வீரர் ஷிகர் தவன் நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT