இந்தியா

பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை: மெஹபூபா முஃப்தி

DIN


பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சு நடத்துவதை கைவிட்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தினார்.
புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. 
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் சம்பந்தப்பட்ட புலனாய்வு விவரங்களை இந்தியா பகிர்ந்துகொண்டால், அந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். பிராந்தியத்தில் அமைதியான சூழல் நிலவுவதையே பாகிஸ்தானும் விரும்புகிறது.
தேர்தல் வரவுள்ளதால், புல்வாமா தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது என்று குற்றம்சாட்டி வாக்கு சேகரிப்பில் இந்திய அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. 
இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் சூழல் வரும் என்று நம்புகிறேன் என்று விடியோ ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மெஹபூபா முஃப்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், பேச்சுவார்த்தையை நடத்துவதை தவிர்த்துவிட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT