இந்தியா

ராகுல் காந்தியின் தொகுதியில் மோடி 27ஆம் தேதி சுற்றுப்பயணம்

DIN


காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவைத் தொகுதியான அமேதியில் பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 27ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
இதுகுறித்து அமேதி மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகி ராஜேஷ் ஆக்ராஹரி கூறியதாவது:
அமேதியில் 27ஆம் தேதி மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது முன்ஷிகாஞ்ச் எனுமிடத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலைக்கு மோடி செல்லவுள்ளார். பின்னர் அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் மோடி உரையாற்றவுள்ளார். இதையடுத்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார் என்றார் அவர்.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி 1.07 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மூத்த தலைவர் ஸ்மிருதி இரானி தோல்வியை சந்தித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT