இந்தியா

பிரதமர் மோடி தென்கொரியா பயணம்!

DIN


புதுதில்லி: தில்லியில் இருந்து நேற்று இரவு தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி சியோல் நகருக்குப் புறப்பட்டு சென்றார். வெளியுறவுத் துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் அவரை வழியனுப்பி வைத்தனர்.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அழைப்பை ஏற்று தாம் பயணிப்பதாகவும், நாட்டின் வளர்ச்சிக்கும் அமைதிக்குமான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தென்கொரியா நாட்டுக்கு பிரதமர் மோடி செல்வது இது இரண்டாவது முறையாகும். இந்தப் பயணத்தின் போது பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு ஒப்பந்தங்கள் உள்பட சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தென்கொரியா சென்று மோடி, இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழில்முனைவோரிடையே கலந்துரையாடுவார். இந்தியா-கொரியா தொழில்கூடத்தையும், யான்செய் பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் சிலையையும் திறந்து வைக்கிறார். 

பிரதமர் மோடிக்கு சியோல் அமைதிப் பரிசு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT