இந்தியா

உ.பி., யில் கைது செய்யப்பட்ட இருவர் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளா?

DIN


உத்தரப் பிரதேசத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில டிஜிபி ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு கடந்த 14-ஆம் தேதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவரை உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக, உத்தரப் பிரதேச டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறுகையில், 

"உளவுத் துறை தகவலின் அடிப்படையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் ஷாநவாஸ் அகமது மற்றும் அக்விப் அகமது மாலிக் என இருவரை கைது செய்துள்ளனர். ஷாநவாஸ் என்பவர் காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அக்விப் என்பவர் காஷ்மீர் மாவட்டம் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர்களிடம் இருந்து 2 ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

அவர்கள் இருவரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

இவர்கள் இருவரும் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த டிஜிபி, "அவர்கள் புல்வாமா தாக்குதலுக்கு முன் இங்கு வந்தார்களா அல்லது அதன் பிறகு இங்கு வந்தார்களா என்று சொல்வது கடினம். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT