இந்தியா

ஆசியான் நிறுவனங்களுக்கு முதலீட்டு வாய்ப்புகள் ஏராளம்: மத்திய அமைச்சர் செளதரி

தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு  இந்தியாவில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சி.ஆர்.செளதரி தெரிவித்தார்.

DIN


தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு  இந்தியாவில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சி.ஆர்.செளதரி தெரிவித்தார்.
மருத்துவ உபகரணங்கள், மீன்பிடி இயந்திரங்கள், கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் தொழில் வாய்ப்புகள் குவிந்துள்ளன என்றார் அவர்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 4-ஆவது இந்திய-ஆசியான் தொழில் மாநாடு -2019 நிகழ்வில் அவர் உரையாற்றியதாவது:
சிறு, குறு தொழில்துறையில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசியான் நாடுகளின் நிறுவனங்களை கேட்டுக் கொள்கிறேன். விமானம் மற்றும் கப்பல் கட்டுமானம், மீன்பிடி தொழில்களில் முதலீடுகளை நாம் அதிகரிக்க முடியும். இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகின்றன. ஆகவே, அதுசார்ந்து முதலீடு செய்வதற்கான வாய்ப்பு ஆசியான் நிறுவனங்களுக்கு கிடைக்கும். 
இதையெல்லாம் தாண்டி, வேறு எந்தெந்த துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கலாம் என்பதை இரு தரப்பும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்றார் அமைச்சர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT