இந்தியா

மக்களவைத் தேர்தல்: குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுக்க பிப். 27-இல் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

DIN


வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுப்பதற்காக, எதிர்க்கட்சிகள் வரும் 27-ஆம் தேதி தில்லியில் கூடி ஆலோசனை நடத்துகின்றன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய உத்திகளை வகுக்கவுள்ளன. இதுகுறித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
இதற்கு முன்பு எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது. 
அந்தக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்காக, தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்கப்படும் என்றும், குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், வரும் 27-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்காக, குறைந்தபட்ச செயல்திட்டத்தை  எதிர்க்கட்சிகள் வகுக்கவுள்ளன.
இடதுசாரி கட்சிகள், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் இணைவதில்லை என்று முடிவெடுத்துள்ளதால், இந்தக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT