இந்தியா

தில்லிக்கு மாநில அந்தஸ்து கோரி மார்ச் 1 முதல் உண்ணாவிரதம்: அரவிந்த் கேஜரிவால் அதிரடி

DIN

 
புதுதில்லி: மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமியை தொடர்ந்து தில்லி முதல்வர் கேஜரிவாலும் தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மார்ச் 1 முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார்.

தில்லி துணைநிலை ஆளுநர் - முதல்வர் கேஜரிவால் இடையே அதிகார மோதல் நிலவி வரும் நிலையில், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தில்லி துணை நிலை ஆளுநர் - முதல்வர் இடையே யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து தில்லி அதிகார மோதல் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு பிறகு ஆம் ஆத்மி முழு மாநில அந்தஸ்து கோரிக்கையை கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில், தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி மார்ச் 1 முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு தில்லி அரசில் அதிகாரம் இல்லை. தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என கேஜரிவால் அறிவித்துள்ளது தில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய அரசை கண்டித்து துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர்கள் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT