இந்தியா

தில்லியில் தேசிய போர் நினைவகம்: இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி

DIN

தில்லியில் இந்தியா கேட் பகுதியில் தேசிய போர் நினைவகத்தை பிரதமர் மோடி திங்கள்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
படியேறிச் செல்வதற்கான இடைவெளியுடன் கூடிய ஒரு பெரிய வட்ட வடிவிலான அடித்தளமும், அதன் மையப் பகுதியில் சதுர வடிவில் மேடையும் அமைந்துள்ளது. அதன் நடுவில் அணையா விளக்குடன் கூடிய ஸ்தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவகம் 40 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படை அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜேஸ்வர் கூறுகையில், "கடந்த 1971ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இந்தியா கேட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதி அங்கேயே இருக்கும். 
தேசியப் போர் நினைவகம் அமைக்க ரூ.176 கோடி செலவானது. சர்வதேச அளவில் போட்டி நடத்தி இந்த வடிவம் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டது.
திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படைத் தலைமை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்' என்றார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை மோடி உரை நிகழ்த்தியபோது, "தேசிய போர் நினைவகத்துக்கு வரும் மக்கள் புனிதமான இடத்துக்கு வருவதைப் போல் உணர்வார்கள்.  சுதந்திரத்துக்கு பிறகு நாட்டுக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவாக இந்த போர் நினைவகம் இருக்கும்' என்று கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT