இந்தியா

நாடாளுமன்றக் குழு முன்பு ஆஜராகாத ட்விட்டர் சிஇஓ  

தகவல், தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு முன்பு  ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே திங்களன்று ஆஜராகவில்லை.

DIN

புதுதில்லி: தகவல், தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு முன்பு  ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே திங்களன்று ஆஜராகவில்லை.

தேசப்பற்று சார்ந்த பதிவுகள் மீது பாகுபாடு பார்க்கப்படுவதாக ட்விட்டர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க அந்த நிறுவனத்துக்கு பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் தலைமையிலான தகவல், தொழில்நுட்ப விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு கடந்த 1-ஆம் தேதி மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் அனுப்பியிருந்தது. அதில், பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு சுட்டுரை நிறுவன பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பின்னர், அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் பங்கேற்பதற்கு வசதியாக, பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்க அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சே மறுத்துவிட்டார். அவருக்கு பதிலாக ட்விட்டரின்  நிர்வகிக்கும் இந்திய அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இவர்களிடன் விவாதிக்க நாடாளுமன்றக் குழு மறுத்துவிட்டது. மேலும், அவர்கள் ஆலோசனை அறைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டனர். 

இதையடுத்து, ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி ஜாக் டோர்சே 25-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. 

ஆனால் திங்களன்று அவருக்கு பதிலாக தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன்பு, ட்விட்டர் நிறுவனத்தின் துணைத்தலைவர் கோலின் குரோவெல் ஆஜரானார்.

இதனையடுத்து நிலைக்குழு சார்பில் கேட்கப்பட்டுள்ள பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு பதிலளிக்க 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் உள்ளிட்ட நிறுவன மூத்த அதிகாரிகளுக்கு மார்ச் 6-ம் தேதி ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT