இந்தியா

எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் அழிப்பு: ராகுல், கேஜரிவால் பாராட்டு 

DIN


புதுதில்லி: புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்துள்ள இந்திய விமானப்படைக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட் பகுதியில் செயல்பட்டும் வரும் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மூலம் இந்திய ராணுவம் வெடிகுண்டுகளை வீசி முற்றிலுமாக தகர்த்துள்ளது.  

இந்திய விமானப்படை பயங்கரவாதிகளின் முகாம்ங்களை தாக்கி அழிப்பதற்காக 1000 கிலோ எடையுள்ள வெடிபொருள்களையும், தாக்குதலுக்கு மிராஜ் போர் விமானங்களை பயன்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தி விமானப்படைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படைக்கு பாராட்டு என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டுள்ளது என தனது பாராட்டில் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி இந்திய விமானப்படை வீரர்கள் பெருமைப்படுத்தியுள்ளனர் என்றும், இந்திய விமானப்படை வீரர்களின் வீர தீரச் செயலுக்கு பாராட்டி என பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT