இந்தியா

பிரபல ஹிந்தி நடிகர் காதர் கான் மறைவு

பிரபல ஹிந்தி நடிகரும், வசனகர்த்தாவுமான காதர் கான்(81), உடல்நலக் குறைவால் கனடாவில் திங்கள்கிழமை காலமானார்.

DIN

பிரபல ஹிந்தி நடிகரும், வசனகர்த்தாவுமான காதர் கான்(81), உடல்நலக் குறைவால் கனடாவில் திங்கள்கிழமை காலமானார்.
 இது குறித்து, அவரது மகன் சர்ஃப்ராஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட எனது தந்தை, கடந்த 17 வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், டிசம்பர் 31-ஆம் தேதி மதியம் அவர் கோமா நிலைக்குச் சென்றார். பின்னர், மாலை 6 மணியளவில் எனது தந்தை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் கனடாவில் நடைபெறும்'' என்றார்.
 கடந்த 1973-ஆம் ஆண்டு ஹிந்தி திரையுலகத்துக்கு அறிமுகமான காதர் கான், 1980 மற்றும் 1990-களில் கொடிகட்டிப் பறந்தார். 300-க்கும் அதிகமான படங்களில் அவர் நடித்துள்ளார். 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ளார். சில படங்களுக்குத் திரைக்கதையும் அவர் எழுதியுள்ளார்.
 பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில், "சிறந்த நகைச்சுவைகள் மூலம் மக்களை சிரிக்க வைத்த பெருமைக்குரியவர் காதர் கான்'' என்று புகழாரம் சூட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அமிதாப் பச்சன், அனுபம் கேர், மனோஜ் பாஜ்பாய், அர்ஜூன் கபூர் உள்ளிட்டோர் காதர் கானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரி கைது

SCROLL FOR NEXT