இந்தியா

மனித உடலில் எத்தனை எலும்புகள்? 256 என்று பதில் சொன்ன ஆசிரியர் கைது

மனித உடலில் எத்தனை எலும்புகள் என்ற கேள்விக்கு 256 என்று தவறாக பதில் சொல்லிக் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் ஒரு ஆசிரியர்.

DIN


ஆக்ரா: மனித உடலில் எத்தனை எலும்புகள் என்ற கேள்விக்கு 256 என்று தவறாக பதில் சொல்லிக் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் ஒரு ஆசிரியர்.

தவறாக பதில் சொன்னதற்காக கைது செய்வதா என்று கேட்காதீர்கள். இது வேறு கதை.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2015ம் ஆண்டு துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வில் முதல் இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றவர்தான் மேற்கண்ட அந்த மகத்தான ஆசிரியர்.

இவர் தேர்வில் முறைகேடு செய்து, போலி மதிப்பெண் சான்றிதழைக் காட்டி பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஷிஷ் குமார் (28) என்ற ஆசிரியர் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது மதிப்பெண் சான்றிதழை பரிசோதித்ததில்  அது போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

விசாரணையில் அவர் கல்லூரி பக்கமே போகவில்லை என்பதும், ஆசிரியர் பயிற்சி முடித்ததாக போலி சான்றிதழ் கொடுத்திருப்பதும் தெரிய வந்தது. கைது செய்வதற்கு முன்பு அவரிடம் மனித உடலில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன என்ற கேள்விக்கு 256 என்றும், 4வது வகுப்பு கணிதத்தையும் போடத் தெரியாமல் இருந்ததையும் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாநில அளவில் முதல் இடத்தை விட்டுவிடுங்கள். அவர் எழுதப் படிக்கத் தெரிந்தவரா என்பதே சந்தேகமாக இருப்பதாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.

மனித உடலில் 206 எலும்புகள் இருக்கும். குழந்தையாக பிறக்கும் போது 270 எலும்புகள் இருந்து, குழந்தை வளரும் போது எலும்புகள் ஒன்றிணைந்து 206க் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT