இந்தியா

வாராணசியில் கோயில்கள் இடிப்பதற்கு எதிராக ஆம் ஆத்மி எம்.பி. தனிநபர் மசோதா தாக்கல்

DIN

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் ஏராளமான கோயில்கள் இடித்து அகற்றப்படுவதை எதிர்த்து மாநிலங்களவையில் ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் தனி நபர் மசோதா தாக்கல் செய்துள்ளார்.
 இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 இந்தத் தனி நபர் மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா அடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாவதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு, வாராணசியில் சுமார் 36 கோயில்களை இடித்து அகற்றியுள்ளது. வாராணசி காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு செல்லும் பாதையை விரிவுபடுத்தும் நோக்கில் புதிதாக 700 மீட்டர் நீளமுடைய சாலைத் திட்டத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதேபோன்று அயோத்தியிலும் கோயில்களை இடிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பாஜக அரசை எதிர்த்து அயோத்தியிலிருந்து வாராணசிக்கு நடைப்பயண இயக்கம் தொடங்கப்படும் என்றார் அவர்.
 கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வாராணசியில் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது முதல் அந்த நகரத்துக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அவ்வப்போது தனது தொகுதிக்கு பிரதமர் மோடி பயணம் செய்து பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்துள்ளார்.
 இந்நிலையில், உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ள இடம் மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியாகும். சரியான சாலை வசதி இல்லை. மேலும், கோயிலைச் சுற்றியுள்ள பகுதி போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இல்லை. இதைத் தொடர்ந்து, அந்தக் கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில் மாநில அரசு இந்தச் சாலை வசதியை ஏற்படுத்தி வருகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT