இந்தியா

திருப்பதியில் ஜன.16-இல் கோ பூஜை

DIN

திருப்பதியில் உள்ள கோசாலையில் வரும் 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் அன்று கோபூஜை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோசாலையில் ஆண்டுதோறும் தேவஸ்தானம் மாட்டுப்பொங்கல் மற்றும் கோகுலாஷ்டமி உள்ளிட்ட தினங்களில் கோபூஜையை நடத்தி வருகிறது. அதன்படி வரும் 16ஆம் தேதி மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தேவஸ்தான கோசாலையில் கோபூஜை நடைபெற உள்ளது. கோசாலை வளாகத்தில் எழுந்தருளியுள்ள வேணுகோபால சுவாமி அபிஷேக ஆராதனைகளுக்குப் பின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதன்பின் மதியம் 12.30 மணிக்கு அகண்டதீபாராதனையும், அன்னதானமும் நடைபெற உள்ளது. அன்று பசுக்களைப் பராமரிக்கும் நிழற்பந்தல் அருகில் வைக்கப்பட்டுள்ள பச்சரிசி, வெல்லம் உள்ளிட்டவற்றை பக்தர்களே நேரடியாக பசுக்களுக்கு வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

மாற்றத்தைக் கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை!

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

மகாராஷ்டிரம்: நட்சத்திர வேட்பாளர்களின் நிலவரம்!

சம்பல்பூர் தொகுதியில் தர்மேந்திர பிரதான் முன்னிலை!

SCROLL FOR NEXT