இந்தியா

சபரிமலைக்குச் சென்று திரும்பிய பெண் மீது மாமியார் தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி  

வெற்றிகரமாக சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பிய திரும்பிய பெண் மீது, மாமியார் தாக்குதல் நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

திருவனந்தபுரம்: வெற்றிகரமாக சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பிய திரும்பிய பெண் மீது, மாமியார் தாக்குதல் நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்தவருடம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியாது. அதன் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதேசமயம் கடந்த 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து மற்றும்  மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன்  சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பினார்கள். 

அவர்கள் இருவரும் கோயிலுக்குச் சென்று திரும்பியுடன் ஐயப்பன் கோயில் தந்திரி கோயில் நடையைச் சாத்தினார். பின்னர் பரிகாரப் பூஜைகள் செய்த பின் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. 

சபரிமலையில் இருந்து திரும்பினாலும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு மற்றும் வலது சாரி அமைப்புகளின் தொடர் போராட்டங்கள் ஆகியவற்றால், கடந்த இரு வாரங்களாக போலீஸார் பாதுகாப்பில் மறைவிடத்தில் கனகதுர்கா தங்கி இருந்தார். 

இந்நிலையில் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்து திரும்பிய திரும்பிய கனகதுர்கா மீது, மாமியார் தாக்குதல் நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.  

போலீஸ் பாதுகாப்பிலிருந்த கனகதுர்கா செவ்வாய் காலை தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த கனகதுர்காவின் மாமியாருக்கும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றது குறித்து கனகதுர்காவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.  தகராறு முற்றி கனகதுர்காவை அவரின் மாமியார் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பதிலுக்கு கனகதுர்காவும் மாமியாரைத் தாக்கியுள்ளார். 

இதில் கனகதுர்காவுக்கு காயம் ஏற்பட்டு பெரிதலமன்னா தாலுக்கா மருத்துவமனைக்குக் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின் மேல் கிசிச்சைக்காக மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கனகதுர்கா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காயப்பட்ட கனகதுர்காவின் மாமியாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

SCROLL FOR NEXT