இந்தியா

அமெரிக்காவின் முக்கிய பதவிகளுக்கு 3 இந்திய-அமெரிக்கர்கள் பெயர் பரிந்துரை

DIN


அமெரிக்காவின் முக்கிய நிர்வாக பதவிகளுக்கு ஒரு பெண் உள்பட 3 இந்திய-அமெரிக்கர்களின் பெயரை ட்ரம்ப் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
அணுசக்தி துறையின் உதவி செயலர் பதவிக்கு இந்திய அமெரிக்கரான பெண்மணி ரீட்டா பாரன்வால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கருவூலத்துறையின் உதவி செயலர் பதவிக்கு விமல் படேல் பெயரும், தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உரிமைகள் கண்காணிப்பு ஆணையத்தின் உறுப்பினர் பதவிக்கு ஆதித்யா பம்ஷாய் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையை அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே அறிவித்து விட்டார். எனினும் அதிகாரப்பூர்வமாக இந்த பதவிகளுக்கான பரிந்துரை செனட் அமைப்புக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டது.
அணுசக்தி நிறுவனத்தில் இயக்குநர் பதவி வகிக்கும் ரீட்டா பாரன்வால், அணுசக்தி துறையின் உதவி செயலர் பதவிக்கு நியமிக்கப்பட்டால், அணுசக்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அலுவலகத்தின் தலைமை பொறுப்பை வகிப்பார். இதற்கு முன்னர் இவரது தலைமையின் கீழ் அணுசக்தி எரிபொருள் குறித்த ஆராய்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட உரிமைகள் சட்டம், நிர்வாக சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் குறித்து கற்பித்து, எழுதி வரும் ஆதித்யா பம்ஷாய், இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டால் அதிபர் மற்றும் மற்று செனட் உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட உரிமைகள் குறித்து ஆலோசனை வழங்கும் பதவியில் இருப்பார்.
அவர் இதற்கு முன்னதாக அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிக்கு உதவியாளராக பணியாற்றினார். பல தனியார் நிறுவனங்களில் சட்ட ஆலோசகராகவும், தேசிய பாதுகாப்பு அமைப்பின் சட்டப்பிரிவிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
கருவூலத்துறையில் துணை உதவி செயலராக பணியாற்றும் விமல் படேல், தற்போது உதவி செயலர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கருவூலத்துறையில் இணைவதற்கு முன்னர், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை பொறுப்பை அவர் வகித்துள்ளார்.
இதுவரை 30-க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்களை டிரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்ட இந்திய அமெரிக்க பெண் நிக்கி ஹேலியும், துணை பத்திரிகை செயலர் அந்தஸ்து வழங்கப்பட்ட ராஜ் ஷாவும் அந்த பதவிகளில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT