இந்தியா

ரூ.100 கோடி அபராதத்தை ஒரே நாளில் செலுத்த வேண்டும்: ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

DIN


ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், ரூ.100 கோடி அபராதத்தை ஒரே நாளில் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஃபோக்ஸ்வோகன் நிறுவனத்தின் கார்கள் இந்தியாவில் உள்ள சுற்றுச்சூழல் விதிகளுக்கு உள்பட்டதாக இல்லை என்ற குற்றச்சாட்டை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கடந்த ஆண்டு அந்த நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. அதனை இப்போதுவரை அந்த நிறுவனம் செலுத்தாமல் இருந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஒரே நாளில் அபராதத்தை செலுத்தியாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசியப் பசுமைத் தீர்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு இந்த விவகாரம் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அபராதத்தை செலுத்தாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தீர்ப்பாயத்தின் தலைவர் கோயல், ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும் அதனை செலுத்தாமல் இருப்பது ஏன்? இதற்கு மேலும் அபராதத்தை செலுத்த கால அவகாசம் தர முடியாது. வெள்ளிக்கிழமை (ஜன. 18) மாலை 5 மணிக்குள் அபராதத் தொகையை செலுத்தியாக வேண்டும். இல்லையென்றால் நிறுவனத்தின் இயக்குநர்கள் சிறைத் தண்டனையை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்றார்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீசல் கார்களில் மாசுபாட்டை அளவிடும் கருவிகளில் மோசடி செய்து சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கார்களை தயாரித்து விற்பனை செய்தார்கள் என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும். இதையடுத்து, அந்த நிறுவனம் ரூ.100 கோடி அபராதத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த நவம்பர் 16-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், அதனை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் செலுத்தாமல் இருந்தது.
நிறுவனம் விளக்கம்: இது தொடர்பாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான புகாருக்கு உள்ளான கார்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. 
மேலும், பசுமைத் தீப்பாயத்தில் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளோம். எனினும், இப்போதைய உத்தரவை ஏற்று ரூ.100 கோடி அபராதத்தை செலுத்தவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT