இந்தியா

இப்படி செய்தால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தலாமாம்! சொல்கிறார் ஒரு சாமியார்!!

ENS


அலிகார்: மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த பல்வேறு யுக்திகளை மத்திய அரசு கையாண்டு வந்தாலும், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சிவிடுமோ என்ற நிலையே நீடிக்கிறது.

இந்த நிலையில், அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு யோகா குரு பாபா ராம்தேவ் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அதாவது, இந்துவோ அல்லது முஸ்லிமோ யாராக இருந்தாலும் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது. 

அவ்வாறு 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களின் ஓட்டுரிமை, வேலை, மருத்துவ வசதிகள் ஆகியவற்றை மத்திய அரசு பறித்து விட வேண்டும்.

இதில்லாமல், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கக் கூடாது.

2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை தரக் கூடாது. 

அரசு பள்ளி, அரசு மருத்துவமனையை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

இதனை கட்டாயமாக்கினால் தானாகவே மக்கள் தொகை குறைந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தால்தான் தன்னைப் போல் புகழ்பெற முடியும் என்றும், சாதனைகள் பல படைக்க முடியும் என்றும் பாபா ராம்தேவ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT