இந்தியா

மத்திய அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்தால் கடுமையாக எதிர்ப்போம்: காங்கிரஸ்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நடைமுறையை மீறி முழு பட்ஜெட் தாக்கல் செய்தால், அதை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையாக எதிர்ப்போம் என்று காங்கிரஸ் எச்சரித்துள்ளது. 

DIN

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நடைமுறையை மீறி முழு பட்ஜெட் தாக்கல் செய்தால், அதை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையாக எதிர்ப்போம் என்று காங்கிரஸ் எச்சரித்துள்ளது. 
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டுக்கு பதிலாக, மத்திய அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முனைவதாக தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ் இவ்வாறு கூறியுள்ளது. 
முன்னதாக, "விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கான நலத்திட்டங்களுடன், மத்திய அரசு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யலாம் எனத் தெரிகிறது. தேர்தலுக்கு முன்பாக அரசு ஒரு முழு ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யக்கூடாது என்று எந்த விதியும் இல்லை. புதிதாக அமையும் அரசு விரும்பும் பட்சத்தில், தேர்தலுக்குப் பிறகு பட்ஜெட்டில் தேவையான மாற்றங்கள் செய்துகொள்ளலாம்' என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. 
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: 
பாஜக தலைமையிலான மத்திய அரசு வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாக தீவிரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அரசமைப்புச் சட்டத்துக்கு மரியாதை அளித்து, இடைக்கால பட்ஜெட்டையே மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். 
அவ்வாறு இல்லாமல் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அது, இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்தது முதல் கடந்த 70 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த நாடாளுமன்ற விதிகள், மரபுகள் உள்ளிட்டவற்றை மீறிய செயலாக இருக்கும். 
5 ஆண்டு காலத்தில் 6 முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பதவிக்காலம் மத்திய அரசுக்கு கிடையாது. அத்துடன், அதற்கான சட்ட வழிமுறையும் இல்லை. ஒருவேளை மத்திய அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்யும் பட்சத்தில், காங்கிரஸ் அதை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையாக எதிர்க்கும் என்று மணீஷ் திவாரி கூறினார். 
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில், "முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முனையும் மத்திய பாஜக அரசின் செயல்பாடு கேள்விக்குரியது. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்களிடையே மாய தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முழு பட்ஜெட் மூலமாக மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிடுவதென்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். ஆட்சிக் காலத்தில் 12 மாதங்கள் எஞ்சியிருந்தால் மட்டுமே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

SCROLL FOR NEXT