முகப்பு
இந்தியா

ராமராக சித்தரிக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்: பிகார் தொண்டர்களின் போஸ்டரால் பரபரப்பு!

மக்களவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், வட மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே கடுமையான போர் தொடங்கியுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2019 at 10:58 AM
பகிர்:

மக்களவைத் தேர்தல் நெருங்கவிருக்கும் நிலையில், வட மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே கடுமையான போர் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது கட்சித் தலைவர் ராகுலை கொண்டாடும் வகையில் சில பல போஸ்டர்களை அடித்து பல பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

அதில் ஒரு போஸ்டரில், நாடாளுமன்றக் கட்டடத்தின் பின்னணியில், ராகுல் காந்தி ராமர் போல சித்தரிக்கப்பட்டிருந்தது. அதே போஸ்டரில் பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் பிகார் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களும்  இடம்பெற்றுள்ளது.

Advertisement

இந்த போஸ்டருக்கு காங்கிரஸ் தரப்பில் வரவேற்பு உள்ளதோ இல்லையோ அதற்குள் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன.

மிக மலிவான அரசியல் என்று இந்த போஸ்டரை இரு கட்சிகளும் விமரிசித்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.