இந்தியா

5 பேரைக் கொன்றுவிட்டு 6 பேர் சிறைக்குச் சென்ற சம்பவம்: அனாதையான நாயை பராமரிக்கும் போலீஸார்

மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில், நிலத் தகராறில் ஒரு குடும்பத்தைக் கொன்று குவித்தக் குற்றத்துக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சிறைக்குச் சென்றுவிட்டதால், அனாதையாக விடப்பட்ட நாய், காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளது.

ANI


மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில், நிலத் தகராறில் ஒரு குடும்பத்தைக் கொன்று குவித்தக் குற்றத்துக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சிறைக்குச் சென்றுவிட்டதால், அனாதையாக விடப்பட்ட நாய், காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளது.

சுல்தான் என்று பெயரிடப்பட்ட அந்த நாயை பராமரித்து வந்த 6 பேர் கொண்ட குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் 5 பேரை கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர்.

சம்பவப் பகுதிக்கு வந்த சோட்டி பஜ்ரியா காவல்நிலைய அதிகாரி மணிஷா திவாரி, 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அனாதையாக விடப்பட்ட நாயை தானே பராமரிக்க முடிவெடுத்தார்.

இந்த நாயைப் பராமரித்து வந்த உரிமையாளர்கள், 5 பேரைக் கொலை செய்த வழக்கில் கைதாகிவிட்டனர். இந்த நாயைப் பராமரிக்க வேறு யாரும் இல்லாத நிலையில், வீட்டில் அனாதையாக இருந்த நாய்க்கு காவல்துறையினர் உணவும், குடிநீரும் கொடுத்துள்ளனர். ஒரு வாரம் கழித்து, காவல்துறையினர் அங்கு சென்ற போது அவர்களை பார்த்த நாய், வாலை ஆட்டியபடியே அவர்களிடம் வந்துள்ளது.

இதையடுத்து, நாயை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து பராமரிக்கும் மணிஷா, இதை யாரேனும் தத்தெடுக்க விரும்பினால் அவர்களிடம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் டிவீட் செய்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீர் இட்லி, சாம்பார் போல அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்: டி.டி.வி. தினகரன்

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

SCROLL FOR NEXT