முகப்பு
இந்தியா

வாராணசியில் நடந்த விநோதத் திருமணம்: மக்களிடையே அதிர்ச்சி அலை!

தங்களது குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, உறவுக்காரப் பெண்கள் இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:26 AM
பகிர்:


வாராணசி: தங்களது குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, உறவுக்காரப் பெண்கள் இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த திருமணம், அவர்களது குடும்பத்தினரை மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவியதால், பொதுமக்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாராணசியில் இதுபோன்று ஒரு பாலின திருமணம் பட்டவர்த்தனமாக நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். ரோஹானியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களும், சிவன் கோயிலுக்கு வந்து தங்களுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கோரியுள்ளனர். ஆனால் அதற்கு பூசாரி மறுத்ததால், கோயிலுக்குள் அமர்ந்து, சிவப்பு நிறக் கயிற்றில் தாலியை ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்குக் கட்டி மாலை மாறிக் கொண்டனர்.

அதனைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வேறு அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்குள், அப்பெண்கள் கோயிலை விட்டு வெளியேறிவிட்டனர்.

இவர்களது திருமணப் புகைப்படங்கள் சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.