இந்தியா

நேரடி வரி வருவாய் உயர்ந்துள்ளது: நிர்மலா சீதாராமன்

DIN

5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது என்று மத்திய நிதித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பட்ஜெட்டில் அவர் கூறியிருப்பதாவது, 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது. நேரடி வரி வருவாய் ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

5 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளோருக்கு வருமான வரி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

கடனில் வாங்கப்படும் மின்சார வாகனத்துக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

நாட்டில் ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இனி 25% வரி விதிக்கப்படும். நாட்டில் உள்ள 99.3%  நிறுவனங்கள் 25% வரி வரம்புக்குள் வருகின்றன என்று தெரிவித்தார்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு முறைகள் தளர்த்தப்படுகின்றன என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT