இந்தியா

ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வங்கிக் கணக்கில் இருந்து பணமாக எடுத்தால்.. நிர்மலா வைத்த செக்

ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்தால் வரி பிடித்தம் 2% ஆக இருக்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


புது தில்லி: ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்தால் வரி பிடித்தம் 2% ஆக இருக்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதாவது, 

பான் அட்டை இல்லாவிட்டால் ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம்.

பான் அட்டையைப் பயன்படுத்த வேண்டிய இடங்களில் ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு இனி கட்டணம் கிடையாது.

வருமான வரிக் கணக்குகளை இனி டிஜிட்டல் முறையில் பரிசோதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்.

ஆண்டு வருமானம் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை இருப்போருக்கு 3% கூடுதல் வரி (சர்சார்ஜ்)

ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி (சர்சார்ஜ்.

5 லட்சத்துக்குக் கீழ் வருவாய் பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் மீது ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதிப்பு

தங்கம் இறக்குமதி மீதான வரி 10%ல் இருந்து 12% ஆக உயர்வு.
மின்சார வாகனங்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு முறைகள் தளர்த்தப்படுகின்றன என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணா, சென்னை பல்கலை. பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தொடர்ந்து கொட்டிய மழை! தண்ணீரில் மிதந்து சென்ற கார்! | Rain | Chennai

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 10 லட்சம் டாலர் வழங்கிய சீனா!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு!

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT