இந்தியா

மும்பையில் அதிக கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

DIN

மகாராஷ்டிர மாநிலம், மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயில் சேவையும் பாதிக்கப்பட்டன. 

2005ஆம் ஆண்டுக்கு பிறகு மும்பையில் மிக அதிக அளவு மழை பெய்தது இந்த ஆண்டில்தான். மழை காரணமாக பல்வேறு இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளான தானே, ராய்கட் மற்றும் பால்கர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜூலை 9 மற்றும் 10-ஆம் தேதி முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT