இந்தியா

கிரீன் கார்டு உச்சவரம்பில் மாற்றம்: அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்: இந்தியர்களுக்கு சாதகம்

DIN


 அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கும் கிரீன் கார்டுகளில் ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என்ற உச்ச வரம்பை நீக்கும் மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இதன் மூலம், அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற விரும்பும் இந்தியர்கள் மிகுந்த பலன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வெளிநாட்டு குடிமக்கள் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதற்காக அளிக்கப்படும் உரிமம் (கிரீன் கார்டு) தொடர்பான தீர்மானம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
உயர்திறன் கொண்ட குடியேற்றவாசிகளுக்கு நியாயம் அளிக்கும் சட்டம் -2019 என்று பெயரிடப்பட்ட அந்த மசோதாவுக்கு ஆதரவாக 365 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் பதிவாகின.
தற்போது, ஓர் ஆண்டில் விநியோகிக்கப்படவிருக்கும் கிரீன் கார்டுகளில் 7 சதவீதம் மட்டுமே ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பணி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவில் அந்த முறை நீக்கப்பட்டு, குடும்ப அடிப்படையில் ஒவ்வொரு நாட்டினருக்கும் மொத்த கிரீன் கார்டுகளில் 15 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யப்படுகிறது.
கிரீன் கார்டுகளுக்காக அதிக அளவில் விண்ணப்பிக்கும் இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் இந்த மாற்றத்தால் பெரிதும் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்ற மேலவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT