இந்தியா

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 4,800 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

DIN


பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 4,800 எம்பிபிஎஸ் இடங்கள் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மக்களவையில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு 24,698 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2017-2018 முதல் 2019-2020 வரை இளநிலை மருத்துவ படிப்புக்கு 15,815 இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 2,153 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நீட் தேர்வு மூலம் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 75,000 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. நாடு முழுவதும் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
19.47 லட்சம் மருத்துவர்கள்: நாட்டில் அலோபதி, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றை சேர்த்து 19.47 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர்.
இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் 11,59,309 அலோபதி மருத்துவர்கள் பதிவு செய்துகொண்டுள்ளனர்.
1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஆனால், நாட்டில் 1,456 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளனர்.
மருந்து நிறுவனங்களிடம் இருந்து பணம், பரிசு பொருள்கள் ஆகியவற்றை மருத்துவர்கள் பெறுவது விதிகளை மீறிய செயலாகும்.
புற்றுநோய் குறித்து மத்திய அரசு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மருத்துவத் துறையில் பயன்படுத்தவும் பல்வேறு பணிகளை அரசு முன்னெடுத்து வருகிறது என்று ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT