இந்தியா

நல்ல சாலைகள் வேண்டும் என்றால் சுங்க கட்டணம் செலுத்தியே தீர வேண்டும்: நிதின் கட்காரி 

நல்ல சாலைகள் வேண்டும் என்றால் சுங்க கட்டணம் செலுத்தியே தீர வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர்  நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

DIN

புது தில்லி: நல்ல சாலைகள் வேண்டும் என்றால் சுங்க கட்டணம் செலுத்தியே தீர வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர்  நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று நாடாளுமன்ற மக்களவையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அத்துறையின் அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்து பேசும்போது கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் நாடுமுழுவதும் 40 ஆயிரம் கி.மீ. நீள நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன. விவாதத்தில் சில எம்.பி.க்கள், பல்வேறு பகுதிகளில் சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

அப்படி வசூலிக்கப்படும் சுங்க கட்டணமானது நாடு முழுவதும் பல்வேறு கிராமப்புறங்களிலும், மலைப்பகுதிகளிலும் சாலை அமைப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றன.சுங்க கட்டணம், காலத்துக்கு தகுந்தாற்போல் மாறுபடலாம். ஆனால், சுங்க கட்டணம் வசூலிப்பது ஒருபோதும் கைவிடப்படாது. அது தொடரும். நல்ல சாலைகள் வேண்டும் என்றால் சுங்க கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும். ஏனென்றால் அரசிடம் பணம் இல்லை.

இருந்தபோதிலும்  எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி பஸ்கள் மற்றும் மாநில அரசு பஸ்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

கோவை: கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடி பாணியில் இல்லாத வீட்டுக்கு வரி!

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

SCROLL FOR NEXT