இந்தியா

காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக: 3 டிஎஸ்பி உட்பட 66 போலீஸார் மீது வழக்குப்பதிவு

DIN

பிகார் மாநில காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக 3 டிஎஸ்பி, 50 ஆய்வாளர்கள் உட்பட 66 போலீஸார் மீது வைஷாலி மாவட்டம் ஹஜிபூர் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை மாலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுவதாவது,

பிகாரில் இதுபோன்று போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்வது இதுவே முதன்முறை. 634 மற்றும் 409 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த 66 போலீஸார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வைஷாலி நகர எஸ்பி எம்.எஸ்.தில்லன் இதுதொடர்பாக உத்தரவிட்டுள்ளார். பல வருடங்களாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முறையாக ஒப்படைக்காத காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து போலீஸாரும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணி மாறுதலுக்குப் பிறகும் தங்களிடம் உள்ள வழக்குகளை மேலும் தாமதிக்காமல் விரைவில் ஒப்படைக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT