இந்தியா

வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்துக்கு நிகரான அங்கீகாரம்: தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு

DIN


வந்தே மாதரம் தேசிய பாடலுக்கு தேசிய கீதத்துக்கு நிகரான அங்கீகாரம் தருவதற்கான கொள்கையை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லிஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பங்கிம்சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடலுக்கு, ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ஜன கண மன எனத் தொடங்கும் தேசிய கீதத்துக்கு நிகரான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின்போது தேசியப் பாடல் மிக முக்கியப் பங்கு வகித்தது. 
1896ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில், இந்தப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது. தேசியப் பாடல், தேசிய கீதம் ஆகியவற்றுக்கு சம மதிப்பளிக்க வேண்டும்.அத்துடன், இரு பாடல்களையும் ஊக்குவிக்க தேசிய அளவில் மத்திய அரசு கொள்கை வகுக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் இரண்டு பாடல்களையும் பாடப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT