இந்தியா

பெங்களூருவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு

DIN


பெங்களூருவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு காவல் ஆணையர் அலோக் குமார் உத்தரவிட்டுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், குமாரசாமியால் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிகிறது. இந்த நிலையில், பெங்களூரு மாநகரத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலோக் குமார் தெரிவிக்கையில், 

"இன்றும் நாளையும் பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை 25-ஆம் தேதி வரை மூடப்படும். யாரேனும் விதிகளை மீறினால், அவர்கள் மீது தண்டனை எடுக்கப்படும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT