இந்தியா

கர்நாடகாவில் சுயேட்சை எம்.எல்.ஏ தகுதி நீக்கம்: சபாநாயகர் அதிரடி 

கர்நாடகாவில் சுயேட்சை எம்.எல்.ஏவான சங்கர் குமாரசாமியை வியாழனன்று தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

DIN

பெங்களூரு: கர்நாடகாவில் சுயேட்சை எம்.எல்.ஏவான சங்கர் குமாரசாமியை வியாழனன்று தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நடத்தியது. இந்த ஆட்சிக்கு சுயேச்சை எம்எல்ஏ சங்கர் குமாரசாமி ஆதரவு கொடுத்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு மந்திரி சபையில் இடம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரத்தில் கூட்டணி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து நெருக்கடி கொடுத்தனர். அப்போது சங்கர் குமாரசாமியும்  ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்று பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தார். பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு  தோல்வியடைந்தது.

இந்நிலையில் சுயேட்சை எம்.எல்.ஏவான சங்கர் குமாரசாமியை வியாழனன்று தகுதி நீக்கம்: சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT