இந்தியா

எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறியது முத்தலாக் மசோதா: திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

DIN


முத்தலாக் தடை மசோதா மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று (வியாழக்கிழமை) நிறைவேறியது. 

உடனடியாக மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யம் நடைமுறையைச் சட்டப்படி தடை செய்ய வழி வகுக்கும் முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தினார்.

இந்த மசோதா மீது மக்களவையில் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். 

வாக்கெடுப்பின் முடிவில் 303 உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.  

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, இன்றைய விவாதத்தின்போது நிலைப்பாட்டை மாற்றி ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

முத்தலாக் தடை மசோதா மீதான காரசார விவாதம்: http://bit.ly/2Y4FgOp

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT