முகப்பு
இந்தியா

மறைந்த மோப்ப நாய் 'தண்டர்': முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

கேரளாவில் 8 ஆண்டுகளாக பணியில் இருந்து ஓய்வு பெற்ற மோப்ப நாய் 'தண்டர்' வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை மறைந்தது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:40 AM
பகிர்:

கேரளாவில் 8 ஆண்டுகளாக பணியில் இருந்து ஓய்வு பெற்ற மோப்ப நாய் 'தண்டர்' வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை மறைந்தது.

லேபரேடர் வகையை சேர்ந்த தண்டர், 2009-ல் பயிற்சி முடித்து பணியில் இணைந்தது. கொல்லம் மாவட்டத்தில் பல வெடிகுண்டுகளை கண்டறிந்துள்ளது.

குறிப்பாக 2011-ல் இறவிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மூட்டை நிறைய வெடிபொருட்களை கண்டறிந்துள்ளது. 2012-ல் 2-ஆவது சிறந்த காவலர் விருதையும் பெற்றுள்ளது. 

இந்நிலையில், தண்டர் இறுதி அஞ்சலி முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. தண்டர் வசித்து வந்த விஸ்ராந்தி ஓய்வு இல்லத்தின் அருகிலேயே அதன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அனைவரிடமும் அன்பு காட்டிய தண்டரின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.