இந்தியா

முத்தலாக் மசோதாவில் அதிமுக போட்ட விடுகதை: ப.சிதம்பரம் கிண்டல் 

முத்தலாக் மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

DIN

சென்னை: முத்தலாக் மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான தேனி ஓ.பி.ரவீந்திரநாத், முத்தலாக் சட்டத்தை ஆதரித்து பேசி வாக்களித்தார். இது தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை அதிமுக மீது ஏற்படுத்தி இருந்தது.

அதேசமயம் செவ்வாயன்று மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது, நவநீதகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள்  'இந்த மசோதாவின் ஒரு சில பிரிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இது உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இம்மசோதாவானது சமூகத்தில் உண்டாக்க கூடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற சிறப்புக்குழுவுக்கு இதனை அனுப்ப வேண்டும' என்று வலியுறுத்தி விட்டு, வாக்களிப்பில் பங்குபெறாமல் வெளிநடப்பு செய்தனர். 

இந்நிலையில் முத்தலாக் மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

முத்தலாக் தண்டனைச் சட்ட மசோதா செல்லாது என்று மிக விளக்கமாக மாநிலங்கள் அவையில் அஇஅதிமுக தலைவர் உரையாற்றினார். அவை உறுப்பினர்கள் அவரது உரையைப் பாராட்டினார்கள்.

மசோதாவின் மீது வாக்கெடுப்பு, அஇஅதிமுக உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை!

மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT