இந்தியா

கர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி தேர்வு

DIN

கர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த நிலையில் சட்டப்பேரவையில் கடந்த 29ஆம் தேதி எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர் சித்தராமையா மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் விவாதித்தனர். 

பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது. எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனிடையே, கர்நாடக சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட பாஜக எம்.எல்.ஏ விஸ்வேஸ்வர் ஹெக்டே நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 

இந்த நிலையில் இன்று கர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT