முகப்பு
இந்தியா

செல்போன் பேட்டரி வெடித்துச் சிதறியதில் 10 வயது சிறுவன் பலி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் செல்போன் பேட்டரி வெடித்துச் சிதறியதில் லக்கான் என்ற 10 வயது சிறுவன் பலியானார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:05 AM
பகிர்:


தார்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் செல்போன் பேட்டரி வெடித்துச் சிதறியதில் லக்கான் என்ற 10 வயது சிறுவன் பலியானார்.

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் வாட்லிபாரா கிராமத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

செல்போனை சார்ஜ் செய்து கொண்டே அதைப் பயன்படுத்தும் போது செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் லக்கான் என்ற சிறுவனின் முகம், கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அவன் சிகிச்சை பலனின்றி பலியானார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.