முகப்பு
தமிழ்நாடு

எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்!

நன்னிலம் தொகுதியில் எஸ்டிபிஐ சார்பில் அதன் தலைவர் முபாரக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 29 மார்ச் 2026, 4:30 pm IST
எஸ்டிபிஐ தலைவர் முபாரக்.
பகிர்:

நன்னிலம் தொகுதியில் எஸ்டிபிஐ சார்பில் அதன் தலைவர் முபாரக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ(இந்திய சமூக ஜனநாயக கட்சி) வரும் பேரவைத் தேர்தலில் நன்னிலம் தொகுதியில் போட்டியிடுகிறது. எஸ்டிபிஐ கட்சி 3 தொகுதிகளை கோரியிருந்த நிலையில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நன்னிலத்தில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி களம்காண்கிறது. இத்தொகுதியில் முபாரக் கடும் போட்டியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், நன்னிலத்தில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. தோ்தலில் திமுக 164 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடவுள்ளது. அதேசமயம் கூட்டணிக் கட்சிகள் ‘உதயசூரியன்’ சின்னத்தில் 11 தொகுதிகளில் போட்டியிடவுள்ளன.

மதிமுக 3 தொகுதிகளிலும், கொங்கு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, தமிழர் தேசம் கட்சி ஆகியவை தலா 1 தொகுதியிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

summary

In the Nannilam constituency, the SDPI (Social Democratic Party of India) has announced its president, Mubarak, as its candidate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.