பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் ஜூன் 8-இல் துவக்கம்
இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மோடி முதல் தடவையாக வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.
புது தில்லி: இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மோடி முதல் தடவையாக வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.
இதுதொடர்பாக வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே உறுதி செய்து வெளியிட்டுள்ள பயணத்திட்டம் பின்வருமாறு:
ஜூன் எட்டாம் தேதி மாலத்தீவுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து ஒன்பதாம் தேதி இலங்கைக்கு செல்கிறார்.
Advertisement
Advertisement
மாலத்தீவு மற்றும் இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பதியில் சாமி கும்பிடுவதற்காக பிரதமர் மோடி திருப்பதி வருகிறார். அதையடுத்து ரேணிகுண்டா சென்று தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மோடி முதல் தடவையாக மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.