குருவாயூர்: கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.
கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கிருஷ்ணர் கோயில் குருக்கள் சிறப்பான கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
இன்று காலை கொச்சியில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் வந்த பிரதமர் மோடி, கோயிலுக்குச் சென்று கிருஷ்ணரை தரிசனம் செய்தார்.
கோயிலில் எடைக்கு எடை துலாபாரம் கொடுத்தார். அவரது எடைக்கு எடையாக தாமரை மலர்களை கோயிலுக்கு பிரதமர் மோடி வழங்கினார். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த மலராகவும், அதே சமயம் பாஜகவின் சின்னமாகவும் அமைந்த தாமரை மலர்களை தனது எடைக்கு நிகராக வழங்கியுள்ளார் மோடி.
பிறகு அபினந்த சபாவில் நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் கட்சிக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.