இந்தியா

பாலஸ்தீன அமைப்புக்கு எதிராக வாக்கு: பிரதமர் மோடிக்கு நெதன்யாகு நன்றி

DIN


ஐ.நா.வில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அரசு சாரா அமைப்புக்கு எதிராக வாக்களித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பான ஷாஹீத், ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பார்வையாளராக இணைவதற்காக அனுமதி கோரியது. ஆனால், அந்த அமைப்பு ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்துடன் வைத்துள்ள தொடர்பு குறித்த தகவல்களைத் தெரிவிக்கவில்லை என இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், இதற்கான வாக்கெடுப்பு கடந்த ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்றது. இதில், அந்த அமைப்புக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
ஜெருசலேம் விவகாரத்தில், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் ஏற்கெனவே பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா முதல் முறையாக வாக்களித்தது. இதற்கு முன்பாக, ஜெருசலேம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சுமுகத் தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்த இந்தியா, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட தனி பாலஸ்தீன நாடு உருவாவதற்கு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததற்காக, பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன், தென் கொரியா, கனடா உள்ளிட்ட 28 நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், சீனா, பாகிஸ்தான், சவூதி அரேபியா, ரஷியா உள்ளிட்ட 14 நாடுகள் பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாகவும் வாக்களித்தன. 
இதையடுத்து, அந்த அமைப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT