இந்தியா

வாட்டும் வெயில்.. இங்கெல்லாம் பள்ளிகளுக்கு 22-ஆம் தேதி வரை லீவு! 

தொடர்ந்து வாட்டும் வெயில் காரணமாக பிகார் மாநிலத்தில் பள்ளிகளுக்கு வரும் 22-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

DIN

பாட்னா: தொடர்ந்து வாட்டும் வெயில் காரணமாக பிகார் மாநிலத்தில் பள்ளிகளுக்கு வரும் 22-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் ஒன்றான பிகாரில் கடும் வெயில் கொளுத்துகிறது. பாட்னா, கயா மற்றும் பாகல்பூர் நகரங்களில் ஞாயிறன்று 115 டிகிரி வெயிலுடன் அனல்காற்று வீசியது. பிகாரில் வாட்டும்  வெயிலுக்கு இதுவரை 70 பேர் வரை பலியாகி உள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் 30 பேரும், கயா மாவட்டத்தில் 20 பேரும், நவடா மாவட்டத்தில் 11 பேரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.

மேலும் வெயிலால் பாதிக்கப்பட்ட மேலும் பலரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெயில் காரணமாக உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்து உள்ளார். 

இந்நிலையில் தொடர்ந்து வாட்டும் வெயில் காரணமாக பிகார் மாநிலத்தில் பள்ளிகளுக்கு வரும் 22-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீடித்து வரும் வெயிலின் தாக்கம் காரணமாக பாட்னா நகரில் கடந்த 9–ந் தேதி முதல் ஞாயிறு வரை அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது வரை வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் கல்வி நிலையங்களை தொடர்ந்து மூட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு வரும் 22-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

தேனிலவுக் கொலை வழக்கு: 790 பக்க குற்றப்பத்திரிகை! | Honeymoon murder

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையத்தில் வேலை வேண்டுமா?

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு - சர்வாதிகார உச்சநிலை! ஓபிஎஸ் காட்டம்!

நீட் தேர்வு கலந்தாய்வில் மோசடி: 11 தேர்வர்கள் மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT