இந்தியா

தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து 4 எம்.பிக்கள் விலகல்: பாஜகவில் சேர உள்ளதாக தகவல்

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

புது தில்லி: தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் சேர்த்து நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வென்றது.

தற்போது அக்கட்சிக்கு என நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆறு எம்.பிக்கள் உள்ளனர். கட்சித் தலைவரான சந்திரபாபுநாயுடு விடுமுறைக்காக குடும்பத்துடன் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார்

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் டி.ஜி.வெங்கடேஷ், ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம்.ரமேஷ் மற்றும் ஜி.எம்.ராவ் ஆகிய நான்கு பேரும் தங்களின் ராஜிநாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடுவை நேரில் சந்தித்து வழங்கினர். அத்துடன் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை பெற பா.ஜனதா முயற்சி செய்து வரும் நிலையில் இந்த நான்கு எம்பிக்களின் செயல்பாடு சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றமின்றி ரூ.88.69 ஆக நிறைவு!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 31.10.25

கறுப்புத் திட்டுகள்... நந்தினி!

2-வது டி20: ரஷித் கான் அபார பந்துவீச்சு; 125 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஜிம்பாப்வே!

SCROLL FOR NEXT