இந்தியா

உத்தரகண்ட் தேசிய பூங்காவில் புலிகள், யானைகள் உயிரிழப்பு: அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

DIN

உத்தரகண்ட் மாநிலம், நைனிடாலில் உள்ள கார்ப்பெட் தேசியப் பூங்காவில் விலங்குகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் புலிகள், யானைகள் உயிரிழந்தது தொடர்பாக, அந்த மாநில அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலைத் தொடரின் அடிவாரத்தில் 1,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கார்ப்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் 225 புலிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகளும் உள்ளன.

இந்தப் பூங்காவில், கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து 2019-ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில் 9 புலிகளும், 21 யானைகளும், 6 சிறுத்தைகளும் உயிரிழந்தது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.

லங்குகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல், இணை சேர்வதில் ஏற்பட்ட மோதல் ஆகியவற்றின் காரணமாக, இந்த விலங்குகள் உயிரிழந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உத்தரகண்ட் அரசின் உயிரியல் காப்பகத்தின் தலைவருக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், கார்ப்பெட் தேசியப் பூங்காவில் விலங்குகள் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு இடையேயான மோதல் குறித்து கார்ப்பெட் பூங்காவின் பொறுப்பாளர் சஞ்சீவ் சதுர்வேதி கூறியதாவது:

புலிகள் தங்கள் உணவுத் தேவைக்காக, யானைகளைக் கொல்கின்றன. அதுவும், குட்டி யானைகளைத் தேர்வு செய்வது புலிகள் கொல்கின்றன. யானைகளைக் கொல்வதற்கு அதிக சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியத் தேவையில்லை. மேலும், யானைகளைக் கொல்வதால், உணவின் அளவும் அதிகமாக இருக்கும். இதுதவிர, இணை சேர்வதில் ஆண்-பெண் புலிகளுக்குள் ஏற்படும் மோதல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT